Live-வில் தற்கொலை முயற்சி!! பெண்ணால் கம்பி எண்ணும் பிரியாணி மேன் அபிஷேக்..

Youtube Gossip Today
By Jai Jul 30, 2024 04:30 AM GMT
Report

பிரியாணி மேன் அபிஷேக் யூடியூப் லைவில் பேசியவாறு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தன்னுடைய தற்கொலைக்கு காரணம் ஜேசன் என்பவர் தான் என்று லைவில் கூறியவாறு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

Live-வில் தற்கொலை முயற்சி!! பெண்ணால் கம்பி எண்ணும் பிரியாணி மேன் அபிஷேக்.. | Biryani Man Abhisheik Arrest For Girl Complaint

அவரின் லைவ் வீடியோவை பார்த்த நண்பர்கள், அபிஷேக்கின் அம்மாவிற்கு இதை தெரிவித்துள்ளனர். பதறிய அபிஷேக் அம்மா கதவை திற என்று கூறியதால் தற்கொலை முயற்சியில் இருந்து வெளியே வந்தார். தாய் தன் மகனை காப்பாற்றும் அந்த வீடியோ இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

இதனை வைத்து சிலர் மீம்ஸ் வீடியோக்களை எடிட் செய்து பிரியாணி மேன் அபிஷேக்கை கலாய்த்து வந்தனர். இந்நிலையில் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிரியாணி மேன் அபிஷேக்கை சென்னை சைபர் கிரைம் போலிசார் கைது செய்துள்ளனர்.