தயாரிப்பாளர், இயக்குநருக்கு கண்டீசன் போட்டு தண்ணி காட்டிய VJ ஜாக்குலின்!! பிரபலம் ஓபன் டாக்..

Nayanthara Gossip Today Tamil Actress
By Edward Jul 25, 2025 08:33 AM GMT
Report

VJ ஜாக்குலின்

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர்களில் ஒருவராக திகழ்பவர் தொகுப்பாளினி ஜாக்குலின். சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த ஜாக்குலின், கோலமாவு கோகிலா படத்தில் நயன் தாராவின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். தற்போது யூடியூப் சேனல் ஆரம்பித்து, பிரபலங்களை பேட்டி எடுத்து வரும் ஜாக்குலின் கெவி என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

தயாரிப்பாளர், இயக்குநருக்கு கண்டீசன் போட்டு தண்ணி காட்டிய VJ ஜாக்குலின்!! பிரபலம் ஓபன் டாக்.. | Bismi Explains Bigg Boss Jacquline Activites Gevi

பத்திரிக்கையாளர் பிஸ்மி

சமீபத்தில் பத்திரிக்கையாளர் பிஸ்மி, ஜாக்குலின் பற்றிய ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில், நயன்தாரா பற்றி பல விஷயங்களை நாம் பேசியிருக்கிறோம். குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் எவ்வாறு நடந்துக்கொள்வார் என்று பேசியுள்ளோம்.

இப்படி இருக்கும்போது ஜாக்குலின் குறித்து கேள்விப்பட்ட பின் தான் நயன் தாராவே எவ்வளவோ பரவாயில்லை என்ற எண்ணம் வருகிறது. நயன் தாராவையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு படக்குழுவினருக்கு தொல்லை கொடுத்துள்ளார் ஜாக்குலின். கதையை கேட்டுவிட்டு நடிக்க ஒத்துக்கொண்ட ஜாக்குலின் இயக்குநரிம், தன்னுடைய போர்ஷன் 40 நிமிடங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று கண்டீஷன் போட்டுள்ளார்.

தயாரிப்பாளர், இயக்குநருக்கு கண்டீசன் போட்டு தண்ணி காட்டிய VJ ஜாக்குலின்!! பிரபலம் ஓபன் டாக்.. | Bismi Explains Bigg Boss Jacquline Activites Gevi

கண்டீசன்

பின் படத்தில் நடித்தவர் ஒரு கட்டத்தில் தன் முழு சம்பளத்தையும் கொடுத்தால் தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார். படத்தின் கிளைமேக்ஸ் ஷூட்டிங் தயாராகிக்கொண்டிருக்கும் போது இவ்வாறு கூறியதால், இயக்குநரும் தயாரிப்பாளரும் பணத்தைப்புரட்டி கொடுத்துள்ளார்கள்.

பணத்தை வாங்கிக்கொண்ட ஜாக்குலின், கிளைமேக்ஸ் காட்சியில் நடிக்க செல்லவில்லையாம். அதன்பின் இயக்குநர், தனது உதவி இயக்குநருக்கு ஜாக்குலின் போல காஸ்ட்யூம் எல்லாம் போட வைத்து படத்தை எடுத்துள்ளார்.

பின் படத்தின் பிரமோஷனுக்கு கூப்பிட்டால், முழு படத்தையும் பார்த்துவிட்டு தான் பிரமோஷனில் கலந்து கொள்வது தொடர்பாக முடிவெடிப்பேன் என்றும் கூறியுள்ளார். முழு படத்தையும் போட்டுக்காட்டியும் ஜாக்குலின் பிரமோஷனுக்கு வரவில்லை. வளர்ந்து வரும் காலத்திலேயே ஜாக்குலின் இவாறு செய்கிறாரே என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.