ஒரு கல்லில் ரெண்டு மாங்கா அடிச்சிட்டாங்க நயன்தாரா!! தனுஷ் விவகாரத்தில் பிஸ்கி ஓப்பன் டாக்..
நயன் தாரா - விக்னேஷ்
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா பல படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் தன் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை ஆண் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டும் வருகிறார்.
சில நாட்களுக்கு முன் தங்களுடைய ஆவணப்படத்தின் டிரைலர் வீடியோவை நயன் தாரா - விக்னேஷ் சிவன் வெளியிட்டனர். அந்த வீடியோவில் நானும் ரவுடி தான் படத்தின் 3 நொடி காட்சி இருந்ததால் நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து 10 கோடி நஷ்டயீடு கேட்டு வழக்கு தொடுத்தனர்.
இதனால் கோபப்பட்ட நயன் தாரா, தனுஷை போசமாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். தற்போது தனுஷ் - நயன் தாரா பிரச்சனைதான் சினிமாத்துறையில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
பத்திரிக்கையாளர் பிஸ்மி
இதுகுறித்து பேசிய பத்திரிக்கையாளர் பிஸ்மி அளித்த பேட்டியில் என்ன காரணம் என்பதை விளக்கியுள்ளார். நயன் தாரா, தனுஷுக்கு ஒரு கடிதம் எழுதவேண்டும் என்றால் அவரது முகவரிக்கு எழுத வேண்டும், அவரது நோக்கம், தனுஷ் குறித்து தன்னுடைய எண்ணங்கள் மக்களுக்கு தெரிவிக்கத்தான் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார்.
இன்றைக்கு அவர் இதை செய்ய காரணம் என்ன என்பது முதல் கேள்வி. இது ஒரு இரண்டு வருட பஞ்சாயத்து. ஏற்கனவே நானும் ரவுடி தான் படத்தின் கிளிப்ஸ் தேவை என்பதால் தனுஷிடம் கேட்டு கொடுக்காமல் போனது. 18 ஆம் தேதி டாக்குமெண்ட்ரி வெளியாகவுள்ள இருப்பதால், அதை பேசுபொருளாக மாற்றத்தான் இதை செய்திருக்கிறார்கள்.
நேற்று காலை முதல் கங்குவா இருந்தது, இப்போது இந்த பிரச்சனைப்பற்றி தான் பேச்சு. ஒரு கல்லில் ரெண்டு மாங்கா அடித்திருக்கிறார் நயன் தாரா.