பல கோடிக்கு கல்யாண வீடியோ விற்ற பஞ்சாயத்து. நயன்தாரா - தனுஷ் பிரச்சனைக்கு காரணமே இதான்..

Dhanush Nayanthara Vignesh Shivan Gossip Today
By Edward Nov 16, 2024 12:30 PM GMT
Edward

Edward

in Gossip
Report

நயன்தாரா - தனுஷ்

நடிகை நயன்தாரா, தனுஷ் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியை அனைவரின் மத்தியிலும் எழுப்பியுள்ளது. நயன்தாராவின் திருமணம் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்றது. திருமணம் முடிந்த பின், நயன்தாராவின் திருமணம் மற்றும் அவருடைய வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாக நெட்பிளிக்ஸ் ஆவணப்படம் ஒன்றை தயார் செய்திருந்தனர்.

பல கோடிக்கு கல்யாண வீடியோ விற்ற பஞ்சாயத்து. நயன்தாரா - தனுஷ் பிரச்சனைக்கு காரணமே இதான்.. | Bismi Opens Up What Happened Nayanthara Dhanush

இதற்கு தனுஷ் தான் காரணம், தனுஷின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து NOC கிடைக்கவில்லை என கூறப்பட்டது. நயன்தாரா ஆவணப்படத்தின் நானும் ரவுடி தான் படத்தின் பாடல்கள், காட்சிகள் இடம்பெறுவதால், அதற்கான NOC தனுஷ் தரப்பில் இருந்து வழங்கவேண்டும். அது கிடைக்காததால் தான், தாமதம் ஆகிவிட்டது என திரை வட்டாரத்தில் பேசப்பட்டது. இது குறித்து நயன்தாரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷை கடுமையாக தாக்கியபடி அறிக்கை வெளியிட்டார்.

பல கோடிக்கு கல்யாண வீடியோ விற்ற பஞ்சாயத்து. நயன்தாரா - தனுஷ் பிரச்சனைக்கு காரணமே இதான்.. | Bismi Opens Up What Happened Nayanthara Dhanush

சினிமா விமர்சகர் பிஸ்மி

இதற்கு என்ன காரணம் என்று சினிமா விமர்சகர் பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். தனுஷ் தயாரித்த நானும் ரவுடி தான் படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுக்க நினைத்தபோது தனது காதலர் விக்னேஷ் சிவனை ஹைலை எய்ய வேண்டும் என்றும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக்க வேண்டும் என்றும் சுமார் 10 கோடி வரை பட்ஜெட்டை நயன் தாரா - விக்னேஷ் சிவன் இழுத்துள்ளனர். வெறும் 3 செகண்ட் வீடியோவுக்கு அவர் கேட்கவில்லை.

இந்த விஷயம் திடீரென வெடிக்கவில்லை, கடந்த 2 ஆண்டுகளாக பஞ்சாயத்து நடந்துள்ளது. வுண்டர்பார் நிறுவனத்தில் பணியாற்றும் நபர் விக்னேஷ் சிவன் தனக்கு என் ஓ சி கொடுக்க வேண்டும், முறையாக தனுஷிடம் அனுமதி வாங்கவில்லை. இதன்பின் தனுஷிடம் நேரடியாக செல்ல அதை பார்த்து கடுப்பாகி தான் தரமுடியாது என்று சொல்லிவிட்டார். இப்படித்தான் இருவருக்கும் மோதல் ஆரம்பித்துள்ளது.

பல கோடிக்கு கல்யாண வீடியோ விற்ற பஞ்சாயத்து. நயன்தாரா - தனுஷ் பிரச்சனைக்கு காரணமே இதான்.. | Bismi Opens Up What Happened Nayanthara Dhanush

நயன் தாரா தன் கல்யாண கேசட்டை பல கோடிக்கு விற்பனை செய்துள்ள நிலையில் அந்த நிறுவனம் நானும் ரவுடி தான் பாட்டை சேர்க்க சொல்லிய நிலையில்தான் தனுஷிடம் கேட்டுள்ளனர். அவர் கொடுக்காத நிலையில் அங்கே சில பல கோடிகள் குறைக்கப்பட்டு இருக்கும். அதன் காரணமாகத்தான் நயன் தாரா விக்னேஷ் சிவனும் இப்படி கொந்தளிக்கிறார்கள் என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.

சிம்புவின் போடா போடி படத்தினை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கு அடுத்து தனுஷ், படம் இயக்க வாய்ப்புக் கொடுத்தார். அஜித் படத்தை மிஸ் செய்ததும் விக்னேஷ் சிவனின் தில்லு முல்லு வேலையால் தான் என்றும் தனுஷ் நிச்சயம் நயன் - விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறியிருக்கிறார் பிஸ்மி.