ரசிகர்களை நம்பினால் டெபாசிட் தான் இழப்பார்!! விஜய் அரசியலை விமர்சித்த பிரபல பத்திரிக்கையாளர்

Vijay Gossip Today
By Edward Jun 23, 2023 02:45 PM GMT
Report

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் லியோ படத்தில் பிஸியாக நடித்து வந்த நிலையில் படத்தின் முதல் பாடல் நேற்று அவரது பிறந்தநாளன்று வெளியானது. நான் ரெடி என்ற பாடல் மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று 16 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது.

இதற்கிடையில் விஜய் சில தினங்களுக்கு முன் பொது தேர்வில் அதிகமதிப்பெண் வாங்கியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார். இதற்கு காரணம் விஜய்யின் அரசியல் நுழைவு தான் என்று பலர் கூறி வந்தனர்.

இந்நிலையில் விஜய் அரசியல் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி விமர்சித்துள்ளது தற்போது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

என்னுடைய கணிப்புப்படி பல தொகுதிகளில் விஜய் டெபாசிட் இழப்பார் என்றும் விஜய் போன்ற சினிமா நடிகர்கள் தங்களுடைய ரசிகர்களை நம்பி அரசியலுக்கு வருகிறார்கள்.

ஒரு வாரம் 10 வாரம் கூட ஒரு படத்தினை அவுஸ்ஃபுல் காட்சிகளாக மாற்ற முடியாது. அப்படி ஒரு படத்தினையே மாற்ற முடியாத அவர்கள் முதலமைச்சர் நாற்காளியில் எப்படி உட்காரவைக்க முடியும். 6 கோடி வாக்காளர்களில் விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் சொர்ப்பமானவர்கள் தான் என்றும் கூறியிருக்கிறார்.