மாமன் - மச்சான் கூட்டணியில் விஜய்க்கு வாய்ப்பு இருக்கா!! அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த நபர்..
தமிழக வெற்றிக் கழகம்
தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், கோட் படத்தில் நடித்து முடித்து அதன் ரிலீஸ்க்காக காத்திருக்கிறார். கோட் படத்தினை தொடர்ந்து இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் 69வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தினை தொடர்ந்து முழு அரசியலில் ஈடுபடுவேன் என்றும் சினிமாவில் இருந்து விலகுவேன் என்றும் விஜய் தெரிவித்திருக்கிறார்.
தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் வேலைகளிலும் கவனம் செலுத்தி வரும் விஜய், சில நாட்களுக்கு முன் கட்சியின் கொடியை பறக்கவிட்டு சரிபார்த்தார். மேலும் செப்டம்பர் மாதம் மிகப்பெரிய மாநாட்டையும் நடத்த திட்டமிட்டிருக்கிறார். விஜய்யின் அரசியல் குறித்து பல சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.
மாமன் - மச்சான் கூட்டணி
அந்தவகையில், பாஜக கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியொன்றில், எந்த பங்காளிகளோடும் போகப்போவதில்லை, கூட்டணியை பங்காளி என்று கூறுவதைவிட எங்கள் அணி மாமன் மச்சான் கூட்டணி என்று கூறியிருக்கிறார்.
உடனே அங்கிருந்த பத்திரிக்கையாளர், மாமன் மச்சான் கூட்டணியில் நடிகர் விஜய் வர வாய்ப்பு இருக்கா? என்று கேட்டுள்ளார். அதற்கு சிரித்தபடி ரியாக்ஷன் செய்த அண்ணாமலை, அய்யோ தலைவா!! மாமன் மச்சன் கூட்டணியில் வேற்றுமை இல்லை, சாதி கிடையாது மதம் கிடையாது, இனம் கிடையாது. பங்காளி என்றால் ஒரே இனம்.
மாமன் மச்சான் கூட்டணிக்கு எல்லோரும் வரலாம் வாருங்கள் என்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.