வீடியோவை டெலீட் செஞ்சிட்டா சரியாகிடுமா!! பரிதாபங்கள் டீமுக்கே ஒரு பரிதாபமா?

Sudhakar Youtube Gossip Today Parithabangal Gopi
By Edward Sep 27, 2024 02:30 AM GMT
Edward

Edward

Report

திருப்பதி லட்டு

ஆந்திராவை தாண்டி தற்போது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் தான் திருப்பதி லட்டில் பசுவின் நெய்யுடன் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதுதான்.

வீடியோவை டெலீட் செஞ்சிட்டா சரியாகிடுமா!! பரிதாபங்கள் டீமுக்கே ஒரு பரிதாபமா? | Bjp Complaints To Andhra Dgp Against Parithabangal

இதுகுறித்து அரசியலில் மட்டும் இல்லாமல் சினிமா மற்றும் சமுகவலைத்தளங்கள் என அனைத்து இடங்களிலும் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல்களான பரிதாபங்கள் சேனலில் திருப்பதி லட்டு குறித்து நகைச்சுவையாக வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த வீடியோ டெலீட் செய்யப்பட்டதுடன் கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பாட்டது, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை, அதையும் மீறி சிலர் மனம் புண்படிருந்தால் மருத்து தெரிவித்து சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டனர்.

வீடியோவை டெலீட் செஞ்சிட்டா சரியாகிடுமா!! பரிதாபங்கள் டீமுக்கே ஒரு பரிதாபமா? | Bjp Complaints To Andhra Dgp Against Parithabangal

பரிதாபங்கள்

அந்த வீடியோ அவர்களின் யூடியூப் சேனலில் இருந்து நீக்கினாலும் இணையதளவாசிகள் அந்த வீடியோவை டவுன்லோட் செய்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், லட்டு பாவங்கள் என்ற பெயரில் வீடியோவை வெளியிட்டு நீக்கியிருந்தாலும், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக கூறி தமிழ்நாடு பாஜக சார்பில் ஆந்திர டிஜிபியிடம் பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.