சிவகார்த்திகேயனுடன் பிரச்சனை..நான் சொன்னதை அப்படி எடிட் பண்ணிட்டாங்க!! பிளாக் பாண்டி..

Sivakarthikeyan Gossip Today Prabhu Solomon Pookie
By Edward Feb 16, 2026 12:45 PM GMT
Report

பிளாக் பாண்டி

கனா காணும் காலம் என்ற தொடரிலும் அங்காடித்தெரு போன்ற படத்திலும் நடித்து பிரபலமானவர் தான் நடிக்ர் பிளாக் பாண்டி. இதனையடுத்து ஒருசில படங்களில் நடித்துள்ள பிளாக் பாண்டி, சிவகார்த்திகேயன் குறித்து விமர்சித்து பேசியது பற்றி வெளிப்படையாக தற்போது கூறியிருக்கிறது.

சிவகார்த்திகேயனுடன் பிரச்சனை..நான் சொன்னதை அப்படி எடிட் பண்ணிட்டாங்க!! பிளாக் பாண்டி.. | Black Pandy Open Sivakarthikeyan Prabhu Solomon

சில ஆண்டுகளுக்கு முன் பிளாக் பாண்டி அளித்த பேட்டியில், ஒருமுறை நடிகர் சங்கத்தில் சிவகார்த்திகேயனை சந்தித்தேன். ஏற்கனவே அவருடன் பழக்கம் இருந்ததால், சிவா என்னிடம் பேச வேண்டும் என்று சொன்னேன். அதனையடுத்து அவரது மேனேஜர் வந்து என்னிடம் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தார். அதை பார்த்து எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அப்போது என் அம்மாவும் இருந்தார்.

உடனே அவரிடம் என் அம்மா, தம்பி அவர் நடிக்கும் படங்களில் இவருக்கு வாய்ப்பு கொடுக்க சொல்லுங்கள், பணம் வேண்டாம் என்று சொன்னார்.

நீங்கள் இப்போது கொடுக்கும் 20 ஆயிரம் ரூபாயோ, இல்லை 50 ஆயிரம் ரூபாயோ தீர்ந்துவிடும், எனக்கு கை, கால் எல்லாம் நன்றாக இருக்கிறது. எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் நீங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொள்ளலாம், நான் அவரிடம் பேச வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள் என்று மேனேஜரிடம் சொன்னேன்.

சிவகார்த்திகேயனுடன் பிரச்சனை..நான் சொன்னதை அப்படி எடிட் பண்ணிட்டாங்க!! பிளாக் பாண்டி.. | Black Pandy Open Sivakarthikeyan Prabhu Solomon

அவர் என்ன சொன்னாரோ தெரியவில்லை, சிவகார்த்திகேயன் என்னிடம் பேசவே இல்லை என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார். தற்போது பூக்கி படத்தில் நடித்துள்ள பிளாக் பாண்டி, படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக பேட்டிகளை கொடுத்து சில விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

தவறாக போடுகிறார்கள்

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சிவகார்த்திகேயனும் நானும் நண்பர்கள் தான். இப்போதும் அதேதான், ஆனால் பேட்டியை எடிட் செய்யும்போது தவறாக போடுகிறார்கள். உண்மை என்ன என்பது முழுமையாக அந்த பேட்டியை பார்த்தால் தான் என்ன நடந்தது என்று தெரியும்.

பிரபு சாலமன் சார் பேமெண்ட் கொடுக்கவில்லை என்று கூறியது நெகட்டிவ் ஆக போய்விட்டது. இதுகுறித்து அவரிடம் பேசி மன்னிப்பு கேட்டேன். அவரும் அதெல்லாம் விடு, அடுத்த படம் பண்ணும் போது நான் கூப்பிடுகிறேன் என்று சொன்னார்.

அவர் பற்றி நான் பேசும்போது என் தங்கை திருமணம் விஷயத்தால் அப்படி பேசிவிட்டேனே தவிர வேறு ஒன்றும் இல்லை என்று பிளாக் பாண்டி தெரிவித்துள்ளார்.