வடிவேலு ரூட்டில் காய்களை நகர்த்தும் நடிகர் சூரி!!அசிங்கப்படுத்திய ப்ளூ சட்டை மாறன்..

Udhayanidhi Stalin Vadivelu Soori Blue Sattai Maran Jallikattu
By Edward Jan 18, 2024 06:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்து தற்போது கதாநாயகனாக உச்சத்தை தொட்டுள்ளவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு படத்தில் முக்கிய ரோலில் நடித்து பரோடா சூரி என்று புகழும் அளவிற்கு பிரபலமான சூரி, விடுதலை படத்தில் மிகப்பெரிய நடிப்பை வெளிக்காட்டி நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

வடிவேலு ரூட்டில் காய்களை நகர்த்தும் நடிகர் சூரி!!அசிங்கப்படுத்திய ப்ளூ சட்டை மாறன்.. | Blue Sattai Maaran Troll Soori Copy Same Vadivelu

நடிப்பை தாண்டி பல இடங்களில் ஓட்டல்களையும் திறந்து வைத்து வருகிறார். சமீபத்தில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கும் போது அமைச்சர் உதயநிதியுடன் இணைந்து போட்டியினை கண்டுக்களித்தார். இதனை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இணையத்தில் ஒரு பதிவினை போட்டு அசிங்கப்படுத்தியிருக்கிறார்.

அவர் பகிர்ந்த பதிவில், உதயநிதியுடன் நடிப்பது, திமுகவினர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என வடிவேலுவின் ரூட்டில் இவர் பயணித்து வருகிறார் என்று கூறி கலாய்த்து தள்ளியிருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள் ப்ளூ சட்டை மாறனை திட்டியபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.