மகேஷ் பாபுவை மிக கேவலமாக கிண்டல் செய்த ப்ளு சட்டை மாறன், எல்லை மீறும் விமர்சனம்
Actors
Mahesh Babu
Tamil Actors
By Dhiviyarajan
ப்ளு சட்டை மாறன் இவர் கையில் ஒரு படம் சிக்குகிறது என்றால் கிழித்து தொங்கவிடுவார். தயாரிப்பாளர்கள் ஒரு காலத்தில் இவரை பார்த்து பயந்து நடுங்கினர்.
ஆனால், காலபோக்கில் இவருடைய விமர்சனங்கள் தனி மனித தாக்குதல்கள் நிறைந்ததாக உள்ளது, மிக கேவலமாக விமர்சனம் என்ற பெயரில் பேசி வருகிறார்.
அந்த வகையில் மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் படத்தை இவர் இந்த வாரம் விமர்சனம் செய்துள்ளார்.
படம் சரியாக இல்லை என்றால் அதை பற்றி பேசினால் பரவாயில்லை, மகேஷ் பாபுவிற்கு சீவி பூ வைத்தால் ஹீரோயின் போல் உள்ளார் என்று தனி மனித தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளார், இது ஒட்டு மொத்த ரசிகர்களிடமும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.