தலைவரை தாண்டி மகள் ஐஸ்வர்யாவை கலாய்க்கும் ப்ளூ சட்டை!! லால் சலாம் சக்சஸ் மீட்..

Rajinikanth Aishwarya Rajinikanth Lal Salaam
By Edward Oct 15, 2024 09:30 AM GMT
Edward

Edward

Report

லால் சலாம் சக்சஸ்

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் படத்தினை ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கி இருந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம்தேதி தியேட்டரில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடிவாங்கியது. இப்படத்தினை ஓடிடி தளத்தில் கூட வாங்காமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில், ஓடிடி தளமான Sun NXTயில் லால் சலாம் படம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தின் வசூல் குறித்து கலாய்த்து எக்ஸ் தளத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

ப்ளூ சட்டை மாறன்

தற்போது லால் சலாம் படத்தின் சக்சஸ் மீட்டில் ரஜினிகாந்த், ஏ ஆர் ரகுமான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து மெமரீஸ் என்று கூறி கலாய்த்திருக்கிறார்.

மேலும் லிங்கா, அண்ணாத்த, வேட்டையன் போன்ற படங்களின் சக்சஸ் மீட் புகைப்படங்களையும் பகிர்ந்து கிண்டல் செய்திருக்கிறார். ப்ளூ சட்டை மாறன். இந்த படம் சக்சஸ் ஆனதா என்று நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு கலாய்த்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery