என்னது படமே வெளியாகல அதுக்குள்ள சக்ஸஸ் பார்ட்டியா! பாபா படத்தை கலாய்த்த ப்ளூசட்டை

Rajinikanth Gossip Today Blue Sattai Maran
By Edward Dec 06, 2022 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களை விமர்சித்து நெகடிவ்வான கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கி வருபவர் யூடியூப் விமர்சகர் ப்ளூசட்டை மாறன்.

சமீபகாலமாக இவரது விமர்சனம் படைப்பாளிகளை அவதூறான வார்த்தையில் பேசி வருவதாக பலர் கண்டனங்களையும் எதிர்ப்பு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

அப்படி சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்தினையும் படுமோசமான விமர்சித்தார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா படம் புதுப்பொலிவுடன் வரும் 10 ஆம் தேதி தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இதற்கு ப்ளூ சட்டை மாறன் பாபா ரீரிலீஸாகவுள்ளது, சக்ஸஸ் பார்ட்டிக்காக காத்திருக்கிறேன் என்று ஒரு பதிவினை போட்டுள்ளார். அதற்கு நெட்டிசன்கள் பலர் கலாய்க்கிறீங்களா இல்லை பாராட்டுகிறீர்களா என்ற கருத்தினை கூறியும் திட்டியும் வருகிறார்கள்.