10 கோடி ரூபாய் ஸ்விஸ் வாட்ச்.. 100 கோடி பங்களா!! சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சூரி..

Gossip Today Soori Viral Photos Blue Sattai Maran
By Edward Jul 18, 2024 08:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்து பின் தன்னுடைய திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்து டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு படத்தில் 10 ரூபாய் பரோட்டாவால் பிரபலமான சூரி அடுத்தடுத்த படங்கள் காமெடி நடிகராக வலம் வந்தார். அதன்பின் டாப் ஹீரோக்களின் படங்களில் முக்கிய ரோலில் நடித்து வந்த சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்தார்.

10 கோடி ரூபாய் ஸ்விஸ் வாட்ச்.. 100 கோடி பங்களா!! சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சூரி.. | Blue Sattai Maran Trolls Soori Photo And Rich

படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து கருடன் படத்தில் நடித்தார். இப்படமும் சூரிக்கு மிகப்பெரிய இடத்தினை கொடுத்தது. தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொடுக்காளி, விடுதலை 2, தி அடமெண்ட் கேர்ல் உள்ளிட்ட படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன் புதிய ஹேர் ஸ்டைலுடன் அமெரிக்காவின் லாஸ் வேகஸ் சிட்டியின் ஒரு பிரம்மாண்ட பங்களாவில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இதனை பார்த்து பலர் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்த நிலையில் ப்ளூ சட்டை மாறன், சூரியை கலாய்த்தபடி ஒரு மீம்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

”10 கோடி ரூபாய் ஸ்விஸ் வாட்ச். 100 கோடியில் வாஷிங்டனில் புதிய பங்களா. குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டார் ஆன சூரி” என்று கூறி விமர்சித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அதுக்கு என்ன அவர் உழைப்பில் முன்னேற்றம் அடைகிறார் என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Gallery