க்ரூப்ல டூப்!! சிவகார்த்திகேயனை விடாமல் அசிங்கப்படுத்தும் ப்ளூ சட்டை..
தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர்களில் ஒருவர் ப்ளூ சட்டை மாறன். ஆரம்பத்தில் படங்களை மட்டும் விமர்சித்து வந்த மாறன் தற்போது நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும் விமர்சித்து வருகிறார்.
முன்னணி நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பலரை கடுமையாக நக்கலடித்து படி பேசி வரும் ப்ளூ சட்டை மாறன், சமீபகாலமாக சிவகார்த்திகேயனை தொடர்ந்து சீண்டி வருகிறார். அயலான் முதல் இமான் பிரச்சனை வரை தொடர்ந்து விமர்சித்தும், பேசியும் வரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
தற்போது, க்ரூப்ல ரூப் என்ற கேப்ஷனுடன் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத நடிகர்கள், இதில் உங்க ஃபேவரைட் யாரு? என்று பதிவிட்டிருந்ததை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், சிவக்குமார், டி ராஜேந்தர், ஆனந்தராஜ், கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் போன்றவர்களின் படங்கள் இடம் பெற்றிருக்கிறது.
சிவகார்த்திகேயனை கலாய்க்க தான் ப்ளூ சட்டை மாறம் இப்படியான பதிவினை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார் என்றும் அவரை கடுமையாக திட்டியும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
க்ரூப்ல டூப்.. pic.twitter.com/tHxQRC8XQg
— Blue Sattai Maran (@tamiltalkies) August 7, 2024