ராஷ்மிகா மாதிரி பொண்டாட்டி வச்சிக்கிட்டு..இந்த திரிஷா தேவையா!! வைரலாகும் தெலுங்கு பட வீடியோ..

Trisha Viral Video Gossip Today Ravi Teja
By Edward Mar 18, 2026 05:42 AM GMT
Report

திரைப்படங்களில் நடிகர், நடிகைகளின் பெயர்களை பயன்படுத்துவது சாதாரண விஷயம் தான், ஆனால் அவை பல படங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.

நடிகர்களின் பெயர்கள் அவர்கள் நடித்த படங்களின் பெயர்களாகவோ கதாபாத்திர பெயர்களாகவோ, நேரடியாக அல்லது மறைமுகமாக குறிப்பிடப்பட்டால் அது, தரமான ரெஃபரன்ஸ் என்று ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

ராஷ்மிகா மாதிரி பொண்டாட்டி வச்சிக்கிட்டு..இந்த திரிஷா தேவையா!! வைரலாகும் தெலுங்கு பட வீடியோ.. | Bmw Movie Tamil Dub Dialogue On Rashmika Trisha

அதேபோல் பல காட்சிகளில் நடிகைகளின் பெயர்கள், நகைச்சுவை நட்சத்திரங்களின் பெயர்களை குறிப்பிட்டால் அந்தந்த காட்சிகளுக்கு ஏற்றவாறு ரசிகர்கள் ரியாக்ஷன் கொடுப்பார்கள். அப்படி த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஓவியாவை விட்டா யாரு, கட்டப்பாவ காணோம் என பல படங்களும் வெளியாகியது.

திரிஷா தேவையா

இந்நிலையில் தெலுங்கு படமான BMW என்ற படத்தில் ஒரு காட்சி தான் தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் ரவி தேஜா நடிப்பில் வெளியான இப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

ராஷ்மிகா மாதிரி பொண்டாட்டி வச்சிக்கிட்டு..இந்த திரிஷா தேவையா!! வைரலாகும் தெலுங்கு பட வீடியோ.. | Bmw Movie Tamil Dub Dialogue On Rashmika Trisha

அப்படத்தின் ஒரு காட்சியில் காமெடி நடிகரிடம் நடிகை ஒருவர், இன்னும் எவ்வளவு பொய் சொல்லுவியோ சொல்லு, வீட்டில் ராஷ்மிகா மாதிரி ஒரு பொண்டாட்டிய வச்சுக்கிட்டு, இந்த திரிஷா கிரிஷா எல்லாம் தேவையாடா என்று கேட்க, அதற்கு அந்த நடிகர், இந்த திரிஷாவை பத்தி மட்டும் பேசாதே என்று பதில் டயலாக் கொடுப்பார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு டிரெண்ட்டாகி வருகிறது.