சொத்து விஷயத்தில் கணவரை மிஞ்சிய ஆலியா பட்.. இத்தனை கோடியா

Alia Bhatt Bollywood Actress Net worth
By Kathick Mar 15, 2025 06:30 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் தனது 19 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகி, தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து, தனது நடிப்பில் ரசிகர்கள் கவர்ந்தவர் ஆலியா பட். மிகப்பெரிய குடும்பத்தில் இருந்து வந்த இவருக்கு சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சில காதல் கிசுகிசுவிலும் சிக்கினார். பின் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வந்த ஆலியா, அவரை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது.

சொத்து விஷயத்தில் கணவரை மிஞ்சிய ஆலியா பட்.. இத்தனை கோடியா | Bollywood Actress Alia Bhatt Net Worth Details

இன்று பல கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை ஆலியா பட்டின் பிறந்தநாள். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை ஆலியாவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 550 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும், இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 15 கோடி முதல் ரூ. 18 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறுகின்றனர். ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.