சித்தாப்பாவுக்கு ஜோடி போட்ட நடிகை!! மருமகனுக்கு இப்போ ஜோடியா? யார் தெரியுமா
பாலிவுட் சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்கள் பான் இந்தியா என்று சொல்லி தென்னிந்திய படங்களில் தற்போது நடித்து வருகிறார்கள். அப்படி ஒரு நடிகை சித்தப்பாவுடன் ஜோடிப்போட்டு நடித்திருந்தார். இப்போது மருமகனுடன் ஜோடியாக நடித்து வருகிறாராம்.
வித்யா பாலன்
அவர் வேறுயாருமில்லை நடிகை வித்யா பாலன் தான். 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகை வித்யா பாலன், 2019ல் மறைந்த பழம்பெரும் நடிகரும், ஆந்திர முதல்வருமான நந்தமுரி தாரக ராமாராவின் வாழ்க்கை வரலாற்று படம் கதாநாயகுடு என்ற டைட்டிலில் வெளியானது.
நடிகர் பாலகிருஷ்ணா, அவரது தந்தை என் டி ஆர் கதாபாத்திரத்தில் நடித்தார். என் டி ஆர் மனைவியாக நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார். என் டி ஆருக்கு 2 மகன்கள், ஒருவர் நந்தமுரி ஹரி கிருஷ்ணா, இன்னொருவர் பாலகிருஷ்ணா.
இதில் நந்தமுரி ஹரிகிருஷ்னாவுடன் நடித்த வித்யாபாலன் தற்போது என் டி ஆரின் மகன் ஜூனியர் என் டி ஆருடன் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இப்படத்தில் வித்யா பாலன் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளாராம்.
