தான் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டு கொண்ட எஸ் ஜே சூர்யா..
தமிழ் சினிமாவில் வாளி மற்றும் குஷி போன்ற படங்களை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தவர் எஸ் ஜே சூர்யா. அஜித், விஜய் என இரு ஜாம்பவான் நடிகர்களை இயக்கியப்பின் இயக்கத்தினை கைவிட்ட சூர்யா பல ஆண்டுகள் கழித்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
வில்லன் ரோலிலும் நடித்து வந்த எஸ் ஜே சூர்யா, இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் பொம்மை என்ற படத்தில் நடித்திருந்தார். பல ஆண்டுகள் கழித்து இப்படம் இன்று தியேட்டரில் வெளியானது.
மேலும் இப்படத்தினை எஸ் ஜே சூர்யாவே தயாரித்திருக்கிறாராம். படம் வெளியாகி மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை பெற்று வந்த நிலையில் ஏமாற்றத்தை தான் கொடுத்திருக்கிறது பொம்மை படம்.
சுவாரஸ்யம் இல்லாததால் படம் போர் அடித்துள்ளது. நடிகர் நடிகைகளில் நடிப்பு சிறப்பாக இருந்தாலும் திரைக்கதையில் மைனஸ் பல இருக்கிறது. ராதா மோகன் படமா இது என்று கூறும் அளவிற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
பல கோடி பணத்தை போட்டு தயாரித்ததால் சிலர் தனக்கு தானே மண்ணை அள்ளி போட்டுக்கொண்டாரே எஸ் ஜே சூர்யா என்று விமர்சித்தும் வருகிறார்கள்.