'தயாரிப்பாளர்கள் அவரை நிராகரித்து இருக்கிறார்கள்'.. ஆதங்கத்துடன் பேசிய பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவி
பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவி போனி வர்மா சமீபத்தில் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், நான் அவரை திருமணம் செய்தபோது வயது வித்தியாசத்தால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று கூறியிருக்கிறார்.

மேலும், 12 வயது மூத்தவராக பிரகாஷ் ராஜ் இருப்பது ஒருபுறம், மேலும் தென்னிந்தியரை திருமணம் செய்தால் தினமும் சாம்பார் சாப்பிட்டே சாக வேண்டி இருக்கும் எனவும் என் குடும்பத்தினர் சொன்னார்கள் என போனி வர்மா கூறியுள்ளார்.
பிரகாஷ் ராஜ் தற்போது அரசியல் பேசுவதால் பல பட வாய்ப்புகள் பறிபோனது என குறிப்பிட்ட அவர், பல விளம்பரங்கள், படங்களில் நடிக்கும் ஒப்பந்தம் ரத்தாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

"ஒப்பந்தம் போட்டு அட்வான்ஸ் கொடுத்த பிறகும் தயாரிப்பாளர்கள் அவரை நிராகரித்து இருக்கிறார்கள்" என ஆதங்கத்துடன் போனி வர்மா பேசியிருக்கிறார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.