ஆர்ஜே பாலாஜி அவமானப்படுத்தியும் குரல் கொடுத்தேன்..சூர்யாவுக்காக!! போஸ் வெங்கட் பேச்சு..

Suriya RJ Balaji Tamil Actors Karuppu
By Jai May 26, 2026 12:45 PM GMT
Report

நடிகர் சூர்யா நடித்த கங்குவா படத்தின் ஆடியோ லான்சின்போது போஸ் வெங்கட், சூர்யா அரசியலுக்கு வரவேண்டும் என்று மேடையில் பேசினார்.

ஆர்ஜே பாலாஜி அவமானப்படுத்தியும் குரல் கொடுத்தேன்..சூர்யாவுக்காக!! போஸ் வெங்கட் பேச்சு.. | Bose Venkat Says Rj Balaji Humiliated Controversy

ஆர்ஜே பாலாஜி vs போஸ் வெங்கட்

அதன்பின் பேசிய ஆர் ஜே பாலாஜி, ஒரு நடிகரின் விருப்பமே இல்லாமல், மேடையில் அரசியல் பற்றி பேசுவது சரியல்ல. நாம் எந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோம் என்பதை புரிந்துக் கொண்டு பேசவேண்டும்.

மனதில் தோன்றியதை எல்லாம் பேசும் இடம் இது அல்ல என்று கூறியிருந்தார். இதனால் போஸ் வெங்கட்டின் முகம் மாறியது.

ஆர்ஜே பாலாஜி அவமானப்படுத்தியும் குரல் கொடுத்தேன்..சூர்யாவுக்காக!! போஸ் வெங்கட் பேச்சு.. | Bose Venkat Says Rj Balaji Humiliated Controversy

இந்நிலையில், போஸ் வெங்கட் அளித்த பேட்டியொன்றில், கங்குவா ஆடியோ லாஞ்சில் நான் சூர்யா அரசியலுக்கு வரவேண்டும் என்று சொன்னேன், உடனே ஆர்ஜே பாலாஜி முந்திரிக்கொட்டை மாதிரி வந்து, என் கருத்தை பேசவிடாமல் என்னை அவமானப்படுத்துற மாதிரி பேசினார்.

அதுமட்டுமில்லாமல் வெளியேயும் என்னைப்பற்றி பேச்சி அவமானப்படுத்தினார். எனக்கு ஆர்ஜே பாலாஜி மீது ரொம்ப கோபம் இருந்தது. ஆனாலும் கருப்பு படம் இணையத்தில் லீக்கானபோது முதல் ஆளாக நான் தான் குரல் கொடுத்தேன், இப்போது கருப்பு மூலம் சூர்யாவுக்கு பெரிய வெற்றி கிடைத்திருப்பதால் எனக்கு மகிழ்ச்சி, அதனால் தான் ஆர்ஜே பாலாஜி மீது கோபமும் போய்விட்டது என்று கூறியிருக்கிறார்.