பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியில் அஜித் பிஆர்ஓ-வின் உதவியாளரை தாக்கிய பவுன்சர்கள்.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ

Ajith Kumar Viral Video Ponniyin Selvan: I Mani Ratnam
By Edward Sep 06, 2022 04:00 PM GMT
Report

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் பொன்னியின் செல்வன். இரு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தில், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடித்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. நட்சத்திரங்களின் பாதுகாப்பபினை பலப்படுத்தி அதிக பவுன்சர்களை பாதுகாப்புக்கு வைத்திருந்தனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் மேனேஜரும் பிஆர்ஓ-வாகவும் பணியாற்றும் சுரேஷ் சந்திராவின் உதவியாளர் விக்கி என்பவரை பவுன்சர்கள் தாக்கி அடித்துள்ள வீடியோ சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் அங்கிருந்த செய்தியாளர்கள் கோபமடைந்தனர். உடனே போலிசார் வந்து அவர்களை சமாதானப்படுத்தியிருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.