மொத்தமா போச்சா.. பிரம்மாஸ்திரா படத்தால் தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்
பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து வெளிவரும் அணைத்து திரைப்படங்கள் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. இந்த அணைத்து தோல்விகளையும் சரி செய்யும் விதமாக பிரம்மாஸ்திரா திரைப்படம் மாபெரும் வெற்றியை பாலிவுட் திரையுலகிற்கு தேடி தரும். மாபெரும் சாதனைகளை வசூலில் படைக்கும் என்று பல விதமாக பில்டப் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், இன்று இப்படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தை பார்த்த முக்கிய சினிமா பிரமுகர்கள் தங்களுடைய விமர்சனங்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளனர். பிரம்மாஸ்திரா திரைப்படம் மிகப்பெரிய ஏமாற்றம். VFX நன்றாக இருக்கிறது. ஆனால், படத்தில் கதை என்று சொல்லும் அளவிற்கு ஒன்றுமில்லை. இந்த வாய்ப்பை பிரம்மாஸ்திரா தவறவிட்டுள்ளது.
மீண்டும் பாலிவுட் திரையுலகிற்கு தோல்வி படமாக பிரம்மாஸ்திரா அமைந்துள்ளது என்பது போல் ட்விட்டரில் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள்.
#OneWordReview...#Brahmāstra: DISAPPOINTING.
— taran adarsh (@taran_adarsh) September 9, 2022
Rating: ⭐⭐#Brahmāstra is a king-sized disappointment… High on VFX, low on content [second half … #Brahmāstra could’ve been a game changer, but, alas, it’s a missed opportunity… All gloss, no soul. #BrahmāstraReview pic.twitter.com/5EOKJrtbiY