ஒரே சின்ன ரூம் ரூ. 5.7 கோடி!! புர்ஜ் கலீபாவில் சினிமா பிரபலங்கள் வீடு வாங்க இதான் காரணம்..

Mohanlal Dubai Shah Rukh Khan Shilpa Shetty
By Jai May 31, 2026 09:45 AM GMT
Report

புர்ஜ் கலீபா

உலகின் மிகவும் உயரமான கட்டிடங்களில் ஒன்று தான் துபாயின் புர்ஜ் கலீபா கட்டிடம். இங்கு ஒரு வீடு வாங்குவது என்பது ஒன்றும் அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. கோடிகளில் புறளும் இந்த புர்ஜ் கலீபாவில் சிறிய வீடு முதல் பங்களா வரை எந்தளவுக்கு ரேட்டில் விற்பனையாகிறது எந்தப் பணக்காரர்கள் எல்லாம் வீட்டை வைத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஒரே சின்ன ரூம் ரூ. 5.7 கோடி!! புர்ஜ் கலீபாவில் சினிமா பிரபலங்கள் வீடு வாங்க இதான் காரணம்.. | Burj Khalifa Apartment Prices What Cost Luxury

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிராப்பர்ட்டி ஃபைண்டர் ரிப்போர்ட், புர்ஜ் கலீபாவின் வீடுகளுக்கான கட்டணம் என்பது மாத வாடகை அல்ல, அது அந்த வீடுகளின் ஒட்டுமொத்த விற்பனை விலை என்று கூறி வெளியிட்டுள்ளது.

விற்பனை விலை

  • ஸ்டுடியோ அப்பார்ட்மெண்ட்ஸ் AED 1.5 மில்லியன் முதல் 2.5 மில்லியன் வரை இருக்குமாம். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 3.4 கோடி முதல் ரூ. 5.7 கோடி வரை இருக்கும்
  • 1 பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் AED 2.2 மில்லியன் முதல் 4 மில்லியன் வரை இருக்குமாம். இந்திய மதிப்பில் ரூ. 5 கோடி முதல் ரூ. 9 கோடி வரை இருக்கும்.
  • 2 பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் விலை AED 4.4 மில்லியன் முதல் 7 மில்லியன் வரை இருக்கும் (ரூ. 10 கோடி முதல் ரூ. 16 கோடி வரை).
  • 3 பெட்ரூம் லக்சரி யூனிட்டுகள் AED 8 மில்லியன் முதல் 20 மில்லியனுக்கும் மேல் இருக்குமாம்.
  • பணம் எல்லாம் மேட்டரே இல்லை என்று சொல்லும் பெரும் பணக்காரர்களுக்கும் தனியாக ஒரு பிரிவு இருக்கிறது. அதுதான் பென்ட்ஹவுஸ் அல்லது அர்மானி குடியிருப்புகள். இதன் விலை AED 35 மில்லியன் முதல் 100 மில்லியனுக்கும் மேல் இருக்குமாம். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 80 கோடி முதல் ரூ. 230 கோடியை தாண்டுமாம்.

இந்த விலை நிர்ணயம் அனைத்தும் துபாய் நிலப்பரிந்துரை கட்டணங்கள், ஏஜெண்ட் கமிஷன்கள், ஆண்டு பராமரிப்புக் கட்டணங்கள் சேர்க்கப்படாதது தான். இவை எல்லாம் சேர்த்தால் இன்னும் கூடுதலாக சில கோடிகள் ஏறுமாம்.

ஒரே சின்ன ரூம் ரூ. 5.7 கோடி!! புர்ஜ் கலீபாவில் சினிமா பிரபலங்கள் வீடு வாங்க இதான் காரணம்.. | Burj Khalifa Apartment Prices What Cost Luxury

பிரபலங்கள் வீடு 

  • அப்படி இங்கு பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சொகுசு பங்களாவை வைத்துள்ளார்.
  • மலையாள நடிகர் மோகன்லால் இந்த கட்டிடத்தில் 29வது மாடியில் துபாய் ஃபவுண்டன் தெரியும்படியான ஒரு பவர்ஃபுல் 1 பெட்ரூம் அப்பார்ட்மெண்ட்டை தன்னுடைய மனைவி சுசித்ராவின் பெயரில் வாங்கியுள்ளார்.

ஒரே சின்ன ரூம் ரூ. 5.7 கோடி!! புர்ஜ் கலீபாவில் சினிமா பிரபலங்கள் வீடு வாங்க இதான் காரணம்.. | Burj Khalifa Apartment Prices What Cost Luxury

  • கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் தன்னுடைய மனைவியுடன் இணைந்து 2009ல் புர்ஜ் கலீபாவில் ஒரு வீட்டை வாங்கி சொத்துப் பட்டியலில் இணைத்துள்ளார்.
  • தொழிலதிபர் ராஜ் குந்த்ரா தன்னுடைய மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டிக்கு திருமண பரிசாக 2010ல் வழங்கி இருக்கிறார். அதன்பின் அவர்கள் அந்த வீட்டை விற்றுவிட்டாலும் பணக்காரர்களின் மெகா கிப்ட் பட்டியலில் இது இன்றும் முதலிடத்திலுள்ளது.
  • இத்தாலியின் உலகப் புகழ்பெற்ற பேஷன் டிசைனர் அர்மானி, இந்த கட்டிடத்தில் அர்மானி ஓட்டலை வடிவமைத்ததுடன் தனக்கென ஒரு பிரத்தியேக விட்டையும் இங்கு வைத்துள்ளார்.

ஒரே சின்ன ரூம் ரூ. 5.7 கோடி!! புர்ஜ் கலீபாவில் சினிமா பிரபலங்கள் வீடு வாங்க இதான் காரணம்.. | Burj Khalifa Apartment Prices What Cost Luxury