முதுகில் ஓங்கி அடித்த புஸ்ஸி ஆனந்த், தடுமாறி கீழே விழுந்த விஜய்.. இதோ வீடியோ
சமீபத்தில் விஜய்யின் மக்கள் இயக்கம் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அடிப்படை தேவைகள், சாப்பாடு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து இருந்தனர்.
தற்போது தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்குவதாக இன்று தகவல் வெளியானது.
அதன் படி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கேடிசி நகரில் 1000 பேருக்கு நிவாரணப் பொருட்களை நடிகர் விஜய் வழங்கவிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டதால் போது அவரை காண ரசிகர்கள் கடலென திரண்டனர். அப்போது விஜய், நிகழ்ச்சி அரங்கில் தட்டுதடுமாறி உள்ளே வந்தார்.
அந்த சமயத்தில் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகி ஒருவர், விஜய் வருவதை அறியாமல் கதவை மூடினார். இதனால் விஜய் தடுக்கி கீழே விழ உடனே கடுப்பான புஸ்ஸி ஆனந்த் கதவை மூடிய அந்த நபரை முதுகில் ஓங்கி அடித்தார்.
இதோ அந்த வீடியோ..
Bussy Anand Attacks a Vijay Fan right in front of Actor #Vijay??♂️?♂️#Vettaiyan#Leo pic.twitter.com/nPpAuia6jT
— RAJINI Vasan (@rajinivasan2345) December 30, 2023