கொலை மிரட்டல், அந்த மாதிரி தொல்லை.. பிக் பாஸ் ஷெரின் அனுபவித்த கொடுமை

Bigg Boss Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 07, 2024 01:30 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஷெரின். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு சமுத்திரக்கனி இயக்கிய "விநோதய சித்தம்" படத்திலும் நடித்திருந்தார்.

கொலை மிரட்டல், அந்த மாதிரி தொல்லை.. பிக் பாஸ் ஷெரின் அனுபவித்த கொடுமை | Car Driver Harassed Bigg Boss Sherin

இந்நிலையில் நடிகை ஷெரினின் சகோதரர் கௌரி குருபரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ஷெரினுக்கு தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அலைபேசியில் அழைத்து பாலியல் ரீதியாகவும், ஆபாசமாக பேசி தொல்லை கொடுக்கிறார்.

அந்த நபர் யார் என்று விசாரித்த போது கார் ஓட்டுநர் முன்பு கார் ஓட்டுநராக இருந்து வந்த கார்த்திக் என தெரியவந்துள்ளது. இதை பற்றி அவரிடம் கேட்ட போது நண்பர்களுடன் சேர்ந்து வீடு வந்து கொலை மிரட்டலும் தவறாக நடக்க முயன்றதாக அந்த புகாரில் தெரிவித்து உள்ளனர். அதன் பின் விசாரணையில் கார்த்திக்கும் அவரது நண்பர் இளையராஜாவும் போலீசார் கைது செய்துள்ளனர்.