5 பேருடன் அட்ஜெஸ்ட் பண்ணனும்..அந்த இடத்தை காட்டசொன்ன இயக்குநர்!! பிரபல நடிகை ஓபன் டாக்..
மிர்ச்சி மாதவி
தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மிர்ச்சி மாதவி. பிரபாஸ் நடிப்பில் வெளியான மிர்ச்சி படத்தில் நடித்திருந்த மாதவி, சினிமாவில் தனக்கு நடந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்து பகிர்ந்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியொன்றில், ஒருவர் போன் செய்து பிரகாஷ் ராஜிற்கு மனைவியாக நடிக்க வேண்டும், ஆனால் 5 பேருடன் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்று சொன்னார். அதற்கு அர்த்தம் புரியவில்லை என்றதும், உங்களை பற்றி எங்களுக்கு தெரியும் என்றார். சுகுமார் சார் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார்.
நான் அப்படிப்பட்டவள் இல்லை, உங்கள் வாய்ப்பு தேவையில்லை என்று கூறிவிட்டேன். இது நல்ல வாய்ப்பு என அவர் சொல்ல, நான் போனை கட் செய்துவிட்டேன். காஸ்டிங் கவுச் எல்லாத் துறைகளிலும் இருக்கிறது.

இடுப்பை காட்டச் சொன்னார்
ஆரம்பத்தில் ஒரு புதிய இயக்குநர் போன் செய்து வீட்டில் சந்திக்கலாமா என்றார். அப்போது எனக்கு பட வாய்ப்புகள் எப்படி கிடைக்கும் என்று தெரியாது. அவரை வீட்டிற்கு அழைத்தேன். அவர் என்னை நடந்து காட்டச் சொன்னார்.
பின் புடவை கட்டி வரச்சொல்லி, இடுப்பை காட்டச் சொன்னார். கோபத்தில் செருப்பால் அடிப்பேன் என்று எச்சரித்து அனுப்பினேன் என்று நடிகை மிர்ச்சி மாதவி தெரிவித்துள்ளார்.
