கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பிரபலங்கள்!! தோழியை இழந்து அவதிபடும் யாஷிகா..
Jai
Yashika Aannand
Accident
Tamil Actors
Tamil Actress
By Edward
சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்கள் ஷூட்டிங்கை முடித்துவிட்டோ, பார்ட்டி முடித்துவிட்டோ வீடு திரும்பும் போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரைவிட்டுவிடுவார்கள். அப்படி சிலர் அதிலிருந்து மீண்டு தப்பித்ததும் உண்டு. அந்தவகையில் கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பித்த சில தமிழ் பிரபலங்கள் யார் யார் என்று பார்ப்போம்..
- நடிகர் ஜெய் மற்றும் பிரேம்ஜி இருவரும் 2017ல் மிகவும் காரில் சென்ற போது பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. ஜெய் குடித்துவிட்டு காரை ஓடியது தான் காரணம் என்றும் கூறப்பட்டது. இருவரும் சிறு காயங்களுடன் விபத்தில் இருந்து தப்பினார்கள்.
- கடந்த 2021ல், நடிகை யாஷிகா ஆனந்த், தோழி உட்பல நண்பர்களுடன் பாண்டிச்சேரியில் பார்ட்டி முடித்துவிட்டு மகாபலிபுரம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளாகியது. இதனால் யாஷிகா மிகப்பெரிய காயம் ஏற்பட்டதோடு, அவரது நெருங்கிய தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் யாஷிகா 4 மாதங்களாக நடிக்கக்கூட முடியாமல் படுத்தபடுக்கையில் சிகிச்சை பெற்று உயிர் தப்பினார்.
- கடந்த 2018ல் சியான் விக்ரம் மகனான துருவ் விக்ரம் நண்பர்களுடன் காரில் சென்ற போது மோசமான விபத்தில் சிக்கினார். அதனால் 3 ஆட்டோக்கள் சேதமடைந்து, நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார்.
- நடிகை குஷ்பூ 2020 காரில் சென்ற போது கண்டெய்னர் லாரியை முந்த முயன்ற போது இடது பக்கத்தில் இடித்தாதில் கார் விபத்தில் சிக்கியது. காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டு, சாமர்த்தியமாக ஓட்டுநர் காரை திருப்பியதால் குஷ்பூ உயிர் தப்பினார்.
- கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த நடிகை ரம்பா 3 குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து வீட்டுக்கு காரில் கூட்டிச்செல்லும் போது எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ரம்பாவும் அவரது மூத்த மகளுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டு உயிர் தப்பினர்.
- 2016ல் நடிகை பிரணிதா காரில் சென்ற போது நிலைதடுமாறியதில் தலைக்குப்புற கவிந்துள்ளது. சீட் பெல்ட் அணிந்ததால் பிரணிதா உயிர் தப்பியிருக்கிறார். ஓட்டுநர் மற்றும் மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டது.
- 2016ல் நடிகர் அருண் விஜய் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். குடித்துவிட்டு தான் வேன் மீது மோதியதாக போலிசார் தெரிவித்துள்ளனர். அதில் சிறு காயம் ஏற்பட்டிருந்தது. சமீபத்தில் ஷூட்டிங்கில் ஏற்பட்ட காயத்தால் தற்போது அவதிப்பட்டு வருகிறார் அருண் விஜய்.
- நடிகர் சர்வானந்த் 2023ல் காரில் சாலையின் நடுவில் சென்ற போது டிவைடரில் மோதி விபத்துக்குள்ளாகி பலத்த காயமடைந்து உயிர் பிழைத்தார்.