வடிவேலுவின் மனைவியாக நடித்த நடிகையா இது! ஆளே மாறிவிட்டாரே.. நீங்களே பாருங்க

Vadivelu Actress
By Kathick Oct 22, 2024 03:30 AM GMT
Kathick

Kathick

in Celebrity
Report

ரஜினிகாந்த் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக சொர்ணா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை சொர்ணா மேத்யூ.

இப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு நல்ல பிரபலம் கிடைத்தது. இவர் தாய் மனசு என்கிற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மாயாபஜார், கோகுலத்தில் சீதை, பெரியதம்பி ஆகிய படங்களில் நடித்தார்.

வடிவேலுவின் மனைவியாக நடித்த நடிகையா இது! ஆளே மாறிவிட்டாரே.. நீங்களே பாருங்க | Chandramukhi Vadivelu Pair Sorna Mathew Photo

தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதன்பின் திருமணம் செய்துகொண்ட நடிகை சொர்ணா மேத்யூ, சினிமாவை விட்டு விலகி வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். ஆனால், சமூக வலைத்தளத்தில் ஆக்டிவான நபராக இருக்கும் நடிகை சொர்ணா மேத்யூ அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், சந்திரமுகி படத்தில் நடித்தவரா இது என கேட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு ஆளே மாறிவிட்டார். இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..