இந்தியாவில் கள்ள உறவில் ஈடுபடும் நகரங்கள்!! தமிழ்நாட்டின் இந்த ஊர் தான் முதலிடம்..
ஆஷ்லே மேடிசன்
இந்தியாவில் திருமணம் என்பது ஒரு உறவை தாண்டி இந்திய கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாகவும் அடையாளமாக இருக்கிறது. 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகைக்கொண்ட நம் நாட்டில் திருமணம் என்பது புனித சடங்காக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீபகாலமாக இந்தியாவில் திருமணத்தை மீறிய உறவு அதிகரித்து வருவது அதிர்ச்சியை அளித்து வருகிறது.
இந்நிலையில் ஆஷ்லே மேடிசன்(Ashley Madison) போன்ற டேட்டிங் செயலிகளின் பயன்பாடுகள் மூலம் திருமணத்தை விட்டு வெளியேற முயற்சி செய்கிறார்கள். இந்த செயலில் திருமணம் உறவுகலை ஆராய்வதற்கான ஒரு முன்னணி உலகளாவிய தளம்.
குறிப்பாக திருமணமானவர்கள் அல்லது உறுதியான உறவுகளில் இருப்பவர்கள் தங்கள் புதிய உறவுளை பற்றி இதில் தேடுகிறார்கள். அதிக எண்ணிக்கையிலான திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்களைக் கொண்ட நகரங்களில் பெரிய நகரங்கள் மட்டுமில்லை, மிகச்சிறிய நகரங்களும் இருக்கிறது.
காஞ்சிபுரம் முதலிடம்
அந்தவகையில் இந்த லிஸ்ட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நகரம் முதலிடம் பிடித்துள்ளது. ஆஷ்லே மேடிசன் தளத்தின் அடிப்படையில் இந்தியாவில் கள்ள உறவில் அதிகமாக ஈடுபடும் டாப் 10 நகரங்கள் எது என்ற லிஸ்ட் வெளியாகியுள்ளது.
இந்த லிஸ்ட்டில் கோவில்கள், பட்டுப்புடவைகளுக்கு உலகளவில் புகழ்பெற்ற இடமாக இருக்கும் காஞ்சிபுரம் தான் இதில் முதலிடம் பிடித்திருக்கிறதாம். 2024ல் 17வது இடத்தில் இருந்த காஞ்சிபுரம் ஒரே வருடத்தில் முதலாம் இடத்திற்கு முன்னேறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியளித்திருக்கிறது.
நகரபுறங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற இடங்கள் கூட முதலிடத்தில் பிடிக்காத நிலையில் காஞ்சிபுரம் பிடித்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து டெல்லி 2வது இடத்திலும், முதல் 20 நகரங்கள் பட்டியலில் டெல்லியை சுற்றிய நகரங்கள் இடம்பிடித்துள்ளது.
