திருமணத்திற்கு முன் இப்படியொரு செயலை செய்த நடிகை மீனா!! ஷாக்கான பிரபல இயக்குனர்..
தமிழ் சினிமாவில் 1982ல் வெளியான நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர் நடிகை மீனா. இப்படத்தினை தொடர்ந்து ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
அதன்பின் வீரா, முத்து, எஜமான் போன்ற படங்களில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிறுவயதில் நடிக்க ஆரம்பித்தார் மீனா. அதன்பின் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். மீனா பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் ஃபேவரெட் நடிகையாக திகழ்ந்து மனதை ஈர்த்து வந்தார்.
தற்போது சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். அதற்காக கெளரவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்று சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டது போல் இயக்குனர் சேரனும் கலந்து கொண்டு மேடையில் மீனா பற்றிய சில சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
பொக்கிஷம் படத்தில் பத்மபிரியாவுக்கு வாய்ஸ் கொடுக்க யாரை வைத்து டப்பிங் செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன். நன்றாக தமிழ் பேசும் அதுவும் தமிழை அழகாக பேச வேண்டும் என்று நினைத்த சமயத்தில் மீனா நியாபத்திற்கு வந்தார். அந்த சமயத்தின் போது இரு நாட்களில் மீனாவுக்கு திருமணம்.
அப்போது போன் செய்து மீனாவை கேட்டால் திட்டுவாரோ என்று யோசித்தேன். அப்படி மீனாவின் அம்மாவிடம் இதை பற்றி கூறினேன். உடனே மீனாவிடம் கொடுத்து விட்டார். மீனாவிடம் இதுபற்றி கூறியது ஓகே சொல்லி இருக்கிறார்.
நாளை திருமணத்தை வைத்துக்கொண்டு அதற்கு முன் தினம் மாலை டப்பிங்கை பேசி முடித்துவிட்டு சென்றார் மீனா. அப்படி அவர் செய்ததற்கு காரணம் மீனா ஒரு கலை காதலர் என்று சேரன் கூறியுள்ளார்.