கால் தவறி விழுந்ததில் 8 தையல் போட்ட இயக்கிநர் சேரன் !படப்பிடிப்பில் ஏற்பட்ட சோகம்
biggboss
cheran
ananthamvilaiyadumveedu
By Edward
தமிழ் சினிமாவில் ஆட்டோகிராப், பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து வந்தவர் இயக்குநர் சேரன். இதையடுத்து அவர் இயக்கி நடித்த படங்கள் பெரியளவில் பேசப்படாமல் போனது. அதன் பின் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு அப்பா மகள் உறவில் நெகிழ வைத்தார் சேரன்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் கெளதம் கார்த்தி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு வீட்டில் பணிபுரியும் காட்சி எடுக்கப்பட்ட போது கால் தவறி கீழே விழுந்துள்ளார் சேரன்.
இதனால் பலத்த காயம் ஏற்பட்டு தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பை நிறுத்தாமல் தனது காட்சிகளை நடித்துக்கொடுத்துள்ளார் சேரன்.