12 வயது சிறுமியிடம் அத்துமீறிய 39 வயதான நபர்! உடல் ரீதியான வன்கொடுமை குறித்து ஹைகோர்ட் அதிர்ச்சி தீர்ப்பு
பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. சமீபத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த 39 வயதான நபர் 12 வயது சிறுமி அவரது வீட்டிற்கு கொய்யாபழம் கொடுப்பதாக கூறி அழைத்துள்ளார்.
திடீரென சிறுமியின் மேல் அங்கத்தை ஆடையோடு சேர்த்து அழற்றிவாறு ஆடையை கழற்ற முயன்றுள்ளான். மகள் அழுது கொண்டு இருக்கும் போது சரியான நேரம் பார்த்து சிறுமியின் தாய் அங்கு சென்று மகள் அழுவதை கண்டு விபரம் கேட்டுள்ளார். சிறுமி நடந்ததை கூறியதும் போலிசில் புகாரளத்ததன் பெயரில் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கின் தீர்ப்பு நடைபெற்றது.
வழக்கை நீதிபதி புஷ்பா கனேடிவாலா விசாரித்து, தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. அரசு தரப்பில் குற்றவாளிக்கு பாலியல் தாக்குதல் பிரிவின் கீழ் போஸ்கோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.
நீதிபதி தீர்ப்பு வழங்கியதில், குற்றவாளி சிறுமியின் ஆடையை அகற்றி மேல் அங்கத்தை அழுத்தினாரா ஆடைக்குள் கைவிட்டு செய்தாரா என்று நிரூபிக்கப்படவில்லை. ஆடை மேலே கைவைத்து அழுத்துவது சட்டப்படி பாலியல் தாக்குதல் பிரிவின் கீழ் வராது என்றும், கைகள் நேரடியாக பெண்ணின் அங்கத்தில் படவில்லை என்பதாலும் இது பாலியல் தாக்குதல் எனக்கூற முடியாது.
பெண்களின் மாண்புக்கு குந்தகம் விளைவிப்பது என்ற பிரிவின் கீழ் தான் வருகிறது. அதனால் குற்றவாளிக்கு ரூ. 500 அபராதம் ஒரு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளார். சர்ச்சை தீர்ப்பு :- நீதிபதி இப்படியான வழக்கின் தீர்ப்பை வழங்கியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி விவாதம் செய்து வருகிறார்கள்.
பெண்ணின் மீது பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதால் இப்படியான தீர்ப்பு குற்றம் செய்வோருக்கு சாதகமாக அமையும். பஸ், ரயில் என பெண்களுக்கு பல சந்தர்ப்பத்தில் குற்றங்கள் நடக்கப்படலாம் என்று சமுகவலைத்தளத்தில் கோரிக்கைகளும் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.