பாளையத்து அம்மன் பட குட்டி சிறுமியா இது!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

Photoshoot Tamil Actress Actress
By Edward Jul 27, 2025 12:30 PM GMT
Report

பாளையத்து அம்மன்

சிறுவயதில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து தற்போது பெரிய ஹீரோக்களுக்கு ஹோடியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து அனைவருக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அந்தவகையில் கமல் ஹாசன் முதல் விஜய் வரை, நடிகை அம்பிகா முதல் சாரா அர்ஜுன் வரை தற்போது டாப் இடத்தில் இருக்கிறார்கள்.

பாளையத்து அம்மன் பட குட்டி சிறுமியா இது!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. | Childhood Actress Akshaya Jayaram Information

அந்தவரிசையில் இருப்பவர் தான் அக்ஷையா ஜெயராம். 2000 ஆம் ஆண்டு தமிழில் இயக்குநர் ராம. நாராயணன் இயக்கத்தில் வெளியான படம் பாளையத்து அம்மன். ராம்கி நாயகனாகவும் திவ்யா உன்னி அவருக்கு ஜோடியாகவும் நடித்திருந்தனர்.

அக்ஷையா ஜெயராம்

அப்படத்தில் ராம்கி - திவ்யா உன்னி தம்பதியின் மகளாக குட்டிச்சிறுமி சத்யா கேரக்டரில் நடித்தவர் தான் அக்ஷையா ஜெயராம். தற்போது அவர் வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.

பாளையத்து அம்மன் பட குட்டி சிறுமியா இது!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. | Childhood Actress Akshaya Jayaram Information

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தான் குடும்பத்துடன் பிக்னிக் சென்றபோது இயக்குநர் ராம நாராயணன் என்னை பார்த்து தன்னை சினிமாவில் நடிக்க அழைத்தார்.

பக்தி படம் என்பதால் என் பெற்றோர் என்னை நடிக்க வைத்ததாகவும் நடிப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்பதால் அதன்பின் நடிக்கவில்லை என்றும் கூறியிருகிறார்.

அப்படத்திற்காக ரூ. 15 ஆயிரம் சம்பளமாக தனக்கு வழங்கப்பட்டதாகவும் அக்ஷையா ஜெயராம் தெரிவித்துள்ளார்.

பாளையத்து அம்மன் பட குட்டி சிறுமியா இது!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. | Childhood Actress Akshaya Jayaram Information

பாளையத்து அம்மன் படம் மட்டுமின்றி, படைவீட்டு அம்மன், ராஜகாளி அம்மன், கோட்டை மாரியம்மன், ஜீவாவின் ஆசை ஆசையாய், பார்த்திபனின் அழகி, சரத்குமாரின் தோஸ்த், விஜயகாந்தின் ராஜ்ஜியம் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அக்ஷையா நடித்துள்ளராம்.

அவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு அவரா இவர் என்று ரசிகர்கள் ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.