சில்லா சில்லா இந்த ஹிட் பாடலின் காப்பியா?
ஹெச் வினோத் இயக்கத்தில், அஜித் குமார் நடிப்பில் துணிவு திரைப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார், படத்திற்க்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
சில்லா சில்லா சர்ச்சை
துணிவு படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அஜித்தின் அடுத்தடுத்த ஸ்டில்கள் படக்குழுவினர் கொடுத்தனர். சில்லா சில்லா பாடல் டிசம்பர் 9 வெளியாகும் என அறிவித்த நிலையில் அதற்கு முன்னேரே சில்லா சில்லா பாடல் இணையத்தில் 10 வினாடி லீக்காகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்தது.

சுல்தான் பாடலின் காப்பியா சில்லா ?
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பின் படி தற்போது அனிருத் பாடிய சில்லா சில்லா பாடல் ரிலீஸ் ஆகிவுள்ளது.
பாடலை கேட்ட நெட்டிசன்கள் இது கார்த்தியின் சுல்தான் படத்திலுள்ள ஜெய் சுல்தான் பாடலின் காப்பி தான் "சில்லா சில்லா" என்று சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

துணிவு 'சில்லா சில்லா' வெளியானது.. ரசிகர்கள் கொண்டாடும் பாடல் இதோ