லட்டுல வச்சேன்னு நினைச்சியா..கேக்குல வெச்சேன்!! சப்ரைஸ் கொடுத்த காதலன்..அதிர்ச்சியான காதலி..
சீனாக்காரன் எதையும் வித்தியாசமாக செய்வான் என்று பலருக்கும் தெரியும். அப்படி ஒரு நபர் தன் காதலிக்கு பிரபோஸ் செய்ய நினைத்து விபரீதத்தில் முடிந்துள்ள சம்பவம் தற்போது உலகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.
சப்ரைஸ் கொடுத்த காதலன்
சீனாவில் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த லியு என்ற இளம்பெண்ணை ஒரு இளைஞர் காதலித்து வந்துள்ளார். காதலி லியுவை கவர்வதற்காக அந்த இளைஞர் கேக் ஒன்றை தானே தயாரித்து, அதில் தங்க மோதிரத்தை மறைத்து சர்ப்ரைஸ் செய்ய நினைத்துள்ளார்.
தங்க மோதிரம்
அந்த இளைஞர், காதலியை தன் வீட்டுக்கு அழைத்து கேக்கை சர்ப்ரைஸாக கொடுக்க, ஆசை ஆசையாக அவரும் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
அப்போது வாயில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டுள்ளதை அறிந்து கேக்கின் தரம் சரியில்லை என்று லியு உணர்ந்து துப்பியுள்ளார். துப்பியதில் எடுத்து பார்த்ததில் தங்க மோதிரம் இருந்ததை லியு பார்த்து அதிர்ச்சியாகி மேலும் கலகலப்பாகி மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இவ்வாறு தன் காதல் கொடுத்த சர்ப்ரைஸை மறக்க முடியாது என்று லியு சமுகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.