நடிகர் ராதா ரவி அப்யூசிவ் ஆளு!! கடுப்பான பிரபல பாடகி
நடிகர் ராதா ரவி அப்யூசிவ் ஆளு!! கடுப்பான பிரபல பாடகி விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்தில் திரிஷாவுக்கு சின்மயி குரல் கொடுத்துள்ளார். டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி நீக்கப்பட்டுள்ள நிலையில், திருட்டுத்தனமாக இரவு வந்து டப்பிங் கொடுத்து இருக்கிறார். இதனால் லோகேஷ் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டியிருக்கிறார்.
டப்பிங் யூனியன் காம்பவுண்டுக்குள் சின்மயியை உள்ளே அனுமதிக்கவே முடியாது என்று நடிகர் ராதா ரவி செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்த சின்மயி, மலேஷிய நாடு வழங்காத போலி டத்தோ பட்டத்த தானே சூட்டிகிட்டு, டத்தோ வளாகம்னு பேரு வெச்ச அந்த டப்பிங் யூனியன் காம்பவுடு, பில்டிங் எல்லாமே இல்லீகல்னு சென்னை கார்ப்பரேஷன் சீல் வெச்சு தரமட்டம் ஆக்கிடுச்சே.
டப்பிங் யூனியன் மெம்பர்ஸோட ஒழைப்புலெருந்து இவங்க எடுத்த காசு மண்ணோட போச்சு.
இவரைபோல ஒரு அப்யூசிவ் ஆளு இருக்கும் எந்த காம்பவுண்ட்லயும் எனக்கு போகணும்ன்ற அவசியமில்ல என்று எஸ் தளத்தில் சின்மயி பதிவிட்டுள்ளார்.