பேச்சே சரி இல்லையே! பிரபல பாடகியை அநாகரீக வார்த்தையால் சீண்டிய நபரின் வீடியோ..
தமிழ் சினிமாவின் முன்னணி பாடகியாக இருந்து மூத்த இசையமைப்பாளர்களின் பாடலுக்கு பாடி பிரபலமானவர் பாடகி சின்மயி. சமீபகாலமாக மீடு பிரச்சனை அதிகரித்து வருவதால் அவரது சமுகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து கருத்துக்களையும் விமர்சனங்களை பெண்களுக்கு நடக்கு கொடுமைகள் பற்றியும் விவாதித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் வைரமுத்து பற்றி இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜோ மைக்கேல் என்பவர் சின்மயியை அநாகரீகமான வார்த்தையில் திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சின்மயின் நடத்தை மற்றும் சினிமாவில் நடந்து கொள்ளும் முறைகளை பற்றி இழிவாக பேசியுள்ளார்.
அதற்கு சின்மயி யாரு இந்த ஜோ மைக்கேல், பேச்சே சரி இல்லையே என்று பதிலடி கொடுத்துள்ளார். பின் அதற்கு ஆமாங்க, பேச்சே சரியில்ல தான் கரெக்ட் தான், எடிட் பண்ண லட்சணம் அப்டி என்று பதிலளித்துள்ளார் ஜோ மைக்கேல்.
yaaaru indha joe michael? Paeche seri illaye?
— Chinmayi Sripaada (@Chinmayi) August 25, 2021