வைரமுத்துவை தொடர்ந்து பிரபல நடிகர் மீது குற்றம் சாட்டிய சின்மயி.. இதோ அந்த பதிவு
தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு நிறைய பாடகர்கள் வந்துவிட்டார்கள்.ஆனால் சிலரது குரலை மட்டும் மக்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட பாடகர்களில் ஒருவர் தான் சின்மயி.
ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கும் சின்மயி, கடந்த சில வருடங்களாக பாடலாசிரியர் வைரமுத்து மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். ஆனால் தற்போது வரை அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
தற்போது சின்மயி பிரபல பாடகர் மீது பரபரப்பு குற்றச்சாற்று முன் வைத்துள்ளார். பிரபல பாடகர் ரஹத் அலிகான் வீட்டில் பணிபுரியும் பெண்ணை மது பாட்டில் கொண்டு அடிக்கும் வீடியோவை பகிர்ந்து, " இவர்களில் சிலர் பொது இடத்தில் மென்மையாக நடந்து கொண்டு, சாதுவாகவும் பேசுவார்கள்".
"இப்படியான நபர்கள் மனித தன்மையற்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்று யாரும் நினைக்க மாட்டாங்க.. முன்பு எல்லாம் கேமரா மட்டும் இருந்தால் பல பிரபலங்களின் உண்மை முகம் வெளியே வந்து இருக்கும்" என்று சின்மயி பதிவிட்டு இருக்கிறார்.
Some of these people behave like such gentle, soft spoken souls in public, one would never think they’d be capable of such inhumane behaviour.
— Chinmayi Sripaada (@Chinmayi) January 27, 2024
If only cameras existed earlier - more of those we celebrate as so called greats would have been exposed for what they actually were to… https://t.co/Touh1w7H2X