திமுக-வின் ஆதரவோடு தான் பெண்களை மிரட்டுகிறார்!! வைரமுத்து வெளுத்து வாங்கும் பிரபல பாடகி..

M. K. Stalin Vairamuthu Chinmayi
By Edward Jul 14, 2023 06:00 AM GMT
Report

சில ஆண்டுகளுக்கு முன் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு அப்போது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் பாடகி சின்மயிக்கும் கவிஞர் வைரமுத்துவுக்கு பெரிய பிரச்சனையே வந்துவிட்டது. அப்போதில் இருந்து வைரமுத்துவை கடுமையாக விமர்சித்து வருகிறார் சின்மயி.

திமுக-வின் ஆதரவோடு தான் பெண்களை மிரட்டுகிறார்!! வைரமுத்து வெளுத்து வாங்கும் பிரபல பாடகி.. | Chinmayi Trolls Mkstalin Vairamuthu Birthday Wish

வைரமுத்துவை பற்றி யார் புகழ்ந்தோ சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டாலோ அவர்களிடம் பாலியல் தொல்லை குறித்து முறையிட்டு வருவார். அப்படி சமீபத்தில் வைரமுத்துவின் 70வது பிறந்தநாளுக்கு தமிழ் நாட்டின் முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து கூறி டிவிட்டரில் பதிவினை பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவினை பார்த்த சின்மயி, பல பெண்களை பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியவருக்கு நேரில் செய்து முதல்வர் வாழ்த்து கூறியிருப்பது கொடுமையாக இருக்கிறது.

2018ல் என்மீது திரைத்துறையில் பல தடைகளை போட்டதால் 5 ஆண்டுகள் பல தடைகளை சந்தித்து போராடி வருகிறேன் என்றும் பாலியல் ரீதியாக பல பெண்களை அச்சுறுத்திய அவருக்கு திமுகவினர் துணையுடன் மிரட்டி வருகிறார்.

திமுக-வின் ஆதரவோடு தான் பெண்களை மிரட்டுகிறார்!! வைரமுத்து வெளுத்து வாங்கும் பிரபல பாடகி.. | Chinmayi Trolls Mkstalin Vairamuthu Birthday Wish

அவர்கள் துணையோடு பல விருதுகளையும் பெற்றிறுக்கிறார். திமுகவின் பலத்தை பயபடுத்துவதால் பெண்கள் பயப்படுகிறார்கள். அரசியல்வாதிகள் பெண்களின் பாதுக்காப்புக்காக பேசுவதாக கூறிக்கொள்வது அவமானம்.

வைரமுத்துவை பற்றி பேச்சு எழும் போதெல்லாம் அவர்கள் அனைவரும் அமைதியாகிவிடுகிறார்கள். எல்லா பிறந்தநாளில் சிறந்த தமிழ் பெண்ணியப்பண்பாட்டில் உள்ள ஆண்களும் பெண்களும் பாலியல் வன்கொடுகைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணை குறியிட்டு வயிறு எரியுதா என்று சொல்கிறார்கள்.

இதுதான் நமது பலாத்கார மன்னிப்பு கலாச்சாரம் என்று கடுமையாக தாக்கி அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார் சின்மயி.