கிருபா வீட்டுக்குள் குடியேறிய கர்ணா, இந்து.. கடுப்பாகும் புவனா - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கர்ணா இந்து ஆகியோர் கிருபா வீட்டுக்குள் வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது இவர்களை வீட்டை விட்டு துரத்த திட்டமிட்ட புவனா இப்போ வீட்டுக்குள்ளவே திரும்ப வந்துட்டாங்க என கிருபாவை ஏற்றி விடுகிறாள். தெருவுல இருந்து கார் செட்டுக்கு வந்தாங்க, இப்ப இந்த வீட்டுக்குள்ள வந்துட்டாங்க. இனிமே இந்து தான் எல்லாருக்கும் தலைமை தாங்க போறா என மூட்டி விடுகிறாள்.

அடுத்ததாக கிருபா மற்றும் இந்து ஆகியோர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டில் பால் காய்ச்சி குடியேறுகின்றனர். இதனால் புவனா, விஷ்வா ஆகியோர் மேலும் கடுப்பாகின்றனர்.
இதைத்தொடர்ந்து எம் எல் ஏ வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்காக கிருபா குடும்பத்தை அழைத்து இருக்க இது லேடீஸ் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் நாம் மட்டும் போனா சரியாக இருக்காது என நினைத்து வீட்டில் உள்ள பெண்களை அழைத்து கொண்டு கிளம்ப முடிவு செய்கின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சின்னஞ்சிறு கிளியே சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.