பாடகி சின்னப்பொண்ணு விபத்தில் சிக்கி இறந்துவிட்டான்னு? பதறிய கனிமொழி..நெகிழ்ச்சி சம்பவம்..
பாடகி சின்னப்பொண்ணு
தமிழ்நாட்டு நாட்டுப்புற கலைஞராக இருந்து பாடகியாக பல பாடல்களில் பாடி வரும் சின்னப்பொண்ணு, தற்போது நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக இருந்து வந்துள்ளார். அவர் அளித்த பேட்டியொன்றில், ஒருமுறை நாட்டுப்புற நலவாரிய பணிகளை முடித்துக்கொண்டு தஞ்சை திரும்பியபோது பெரிய கார் விபத்தில் சிக்கி பயங்கர காயம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான் என் கணவரும் செத்துப்பிழைத்தோம். நாங்கள் இருவரும் விபத்தில் இறந்துவிட்டதாக தொலைக்காட்சிகளில் செய்தியாக வெளியானது. அந்தளவிற்கு விபத்து பெரிய விபத்தாக இருந்தது. இது கனிமொழி கவனத்திற்கு செல்ல, உடனே ஆட்களை அனுப்பி சின்னப்பொண்ணுக்கு என்ன ஆனது என்று பார்க்க சொன்னார். அவர்கள் விஷயம் தெரிந்து மருத்துவமனைக்கு வந்து எங்களுக்கு ஏற்பட்ட காயம் குறித்து கனிமொழியிடம் கூறினர்.
பதறிய கனிமொழி
உடனே சம்பந்தப்பட்ட மருத்துவனைக்கு கால் செய்து சின்னப்பொண்ணு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும், இல்லாவிட்டால் சென்னைக்கு அனுப்பிவிடுங்கள் என்று கூறியுள்ளார். உடனே நான் இருக்கும் வார்ட் நோக்கி டீன் வந்து, என்னிடம் விஷயத்தை கூறி, கனிமொழி மேடம் உங்கள் மீது எத்தனை மரியாதை வைத்திருந்தால் நேரடியாக கால் செய்து கவனித்துக்கொள்ள சொல்வார் என்று டீன் சொன்னார்.
பின் நெற்றியில் பலத்த அடியால் நெற்றியை இழுத்து வைத்து தையல் போட்டதால் ஒரு மாதிரி அசிங்கமாக இருந்தது. அந்நேரத்தில் சங்கமம் நிகழ்ச்சிக்கு எல்லோரும் போனபோது வீட்டில் இருக்க சொல்லியும் நான் அடம்பிடித்து அங்கு போனேன். அங்கு கனிமொழி என்ன நலம் விசாரித்தார். ஆமாம் மேடம், ஆனால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவேண்டும் என்று நெற்றியை காட்டினேன். அப்போது சர்ஜரி எல்லாம் செய்ய வேண்டாம் அதுதான் உங்கள் உழைப்பின் அடையாளம், அப்படியே விட்டுவிடுங்கள் என்று சொன்னதால் அப்படியே விட்டுவிட்டேன் என்று சின்னப்பொண்ணு கூறியிருக்கிறார்.