VJ சித்ரா தற்கொலையால் சின்னாபின்னமான ரக்சன்! 10 வருடமாக மனைவியை மறைக்க இதுதான் காரணமா?

wedding television presenter
By Jon Feb 18, 2021 02:40 AM GMT
Report

சின்னத்திரை சினிமாவை பெரியளவில் அதிர்ச்சியாக்கிய சம்பவம் விஜே சித்ராவின் தற்கொலை தான். பல வருங்களாக தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றினாலும் தனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. அதை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இதையடுத்து கடந்த ஆண்டு, கணவரின் தூண்டுதலால் தற்கொலை செய்து மரணமடைந்தார்.

இதையடுத்து தற்கொலைக்கு சம்பந்தமான காரணம் என்ன என்று தெரியாமலே இருந்து வருகிறது. அந்தவகையில் ஒரு காரணமாக தொகுப்பாளர் ரக்‌ஷன் சித்ரா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், தன்னுடன் விஜே சித்ரா தனிமையில் இருந்த வீடியோவை காட்டி மிரட்டி வந்ததாக செய்திகள் பரவியது. இதனால் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தார் ரக்‌ஷன்.

இந்நிலையில் தனக்கு திருமணமாகி 10 வருடங்கள் கழித்து தானாகவே முன்வந்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் vj ரக்சன். சித்ரா பஞ்சாயத்தில் சிக்கி சின்னாபின்னமானதால் வேறு வழியில்லாமல் தனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருப்பதை தெரிவித்துள்ளார்.

சினிமாவில் பெரும்பாலான பிரபலங்கள் தங்களின் மார்க்கெட்டும் கேரியரும் வீணாகாமல் இருக்க திருமணமானதையும், காதல், விவாகரத்து என மறைத்து வாழ்ந்து வருவார்கள். அது தற்போது ரக்‌ஷனுக்கு விணையாக முடிந்துள்ளது. திருமணமானது ஏற்கனவே தெரிந்திருந்தால் ரக்‌ஷன் மேல் திணித்த வதந்தி இல்லாமல் ஆகியிருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.