அதிர்ச்சியை கொடுத்த நடிகைகளின் மரணம்! அதுவும் இந்த நடிகை ரொம்ப பாவம்..
சினிமாவில் நாம் பார்த்து ரசிகர்கள் நடிகைகள் சிலரின் திடீர் மரணம் மக்கள் மனதில் பல நாட்களாக கஷ்டத்தை கொடுக்கும். அப்படி சிறு வயதில் கூட ஒருசில நடிகைகள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து மரணம் வரை செல்கிறார்கள். அந்தவகையில், கொடூரமான கஷ்டப்பட்டு இறந்த நடிகைகளை பார்ப்போம்.
படையப்பா, சொக்கத்தங்கம், தவசி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தவர் நடிகை செளந்தர்யா. பல ரசிகர்களின் கிரஸ் நடிகையாக இருந்த செளந்தர்யா சகோதரருடன் ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருக்கும் போது விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இந்த செய்தி தமிழ் சினிமாவில் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
பத்ரி, பார்வை ஒன்றே போதும், சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தவர் நடிகை மோனால். நடிகை சிம்ரனின் தங்கையாக அறிமுகமாகிய மோனால் டான்ஸ் மாஸ்டரின் தம்பியை காதலித்து வந்துள்ளார். குடும்பத்தில் யாரும் சம்பதம் தெரிவிக்காத நிலையில் தற்கொலை செய்து மரணமடைந்தார். 23 வயதில் தன் வாழ்க்கையில் வளர்ந்து வரும் சூழலில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சவுண்ட் பார்ட்டி, சூப்பர் குடும்பம் போன்ற படங்களில் நடித்த பிரதியூஷா சித்தார்த் என்பவரை காதலித்து வந்துள்ளார். வீட்டில் யாரும் சம்மத தெரிவிக்கவில்லை என்று தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தன் மகள் தற்கொலை செய்யவில்லை, பலரால் கற்ப்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று அவரது அம்மா பேட்டியில் கூறியிருந்தார். தடவியல் பரிசோதனைகளில் கூட அவரின் உடலில் விந்தணுக்கள் இருந்ததாகவும் உடலில் நகக்கீரல்களும் இருந்ததாக கூறப்பட்டது.
பிஸ்தா போன்ற படங்கள் மூலம் பிரபலமான நடிகை சிந்து நுரையீரலில் ஏற்பட்ட நோய் காரணமாக மரணமடைந்துள்ளார். விஜய்யின் நண்பரான சஞ்சீவின் சகோதரியாவார்.
7ஜி ரெயின்போ காலனி, ஏய் போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்றவர்தான் இந்த மயூரி. இவர் கடந்த 2005ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. மரணத்திற்கு யார் என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.