கிரிக்கெட் வீரருடன் நடிகை ஸ்ரீலீலா காதல்..? உண்மை உடைத்து கூறிய அவருடைய அம்மா
Sreeleela
By Karthick Raja
ஸ்ரீலீலா தென்னிந்திய சினிமாவில் இளம் சென்சேஷனல் நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பை தாண்டி நடனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
நடிகை ஸ்ரீலீலா பிரபல கிரிக்கெட் வீரர் திலக் வர்மா என்பவரை காதலித்து வருவதாக தகவல் ஒன்று இணையத்தில் கடந்த சில நாட்களாக உலா வருகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து ஸ்ரீலீலாவின் அம்மா கோபமாக பேட்டி கொடுத்து இருக்கிறார். "இந்த வதந்திகள் முற்றிலும் பொய்யானவை, உண்மை இல்லை. இப்படிப்பட்ட கதைகள் எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. இது முற்றிலும் கற்பனையான தகவல் தான்."
"ஒரே நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் வந்ததாக சொல்லப்படுவது எதேச்சையாக நடந்தது. வேறு எதுவம் இல்லை. சம்மந்தமே இல்லாத விஷயத்தை வைத்து தேவையில்லாத கதைகளை சமூக வலைத்தளங்களில் பரப்புகிறார்கள்" என கூறியுள்ளார்.