3 பிள்ளைகள் இருந்தும் முதியோ இல்லத்தில் உயிரிழந்த முதல்வர் விஜய்யின் பெரியம்மா..
Death
C Joseph Vijay
By Jai
விஜய்யின் பெரியம்மா
தமிழக முதலமைச்சர் விஜய்யின் பெரியப்பாவும், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரின் மூத்த அண்ணனுமான ராஜசேகரின் மனைவி அமல் ராஜசேகரன் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.

இரு மகன்கள், ஒரு மகள் என பெரிய குடும்பமாக இருந்தும் தங்களை கவனிக்க ஆல் இல்லாததால் முதியோர் இல்லத்தில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார் விஜய்யின் பெரியம்மா.
ராஜசேகரன் - அமல் தம்பதியின் 3 பிள்ளைகளும் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டனர். கைநிறைய சம்பாதித்தும் வயதான காலத்தில் தங்களை கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லாததால் சென்னை நீலாங்கரையிலுள்ள மதர் ஜோசஃபின் வன்னினி என்ற முதியோர் இல்லத்தில் தங்கி வந்துள்ளனர்.

தன்னுடைய பெரியம்மா இறந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் விஜய் முதியோர் இல்லத்திற்கு வந்து உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.