குக் வித் கோமாளி சீசன் 6ல் யூடியூப் பிரபலம்!! புகழ் கொடுத்த ட்விஸ்ட்..
குக் வித் கோமாளி 6
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. கடந்த ஆண்டு குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கநாஜ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் போது மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் மணிமேகலை தொகுத்து வழங்குவதில் இருந்து பாதியிலேயே விலகினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5ன் டைட்டில் வின்னராக பிரியங்கா தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
சஜின்
குக் வித் கோமாளி சீசன் 5 முடிந்து கிட்டத்தட்ட 6 மாதத்திற்கும் மேலாகியுள்ள நிலையில், புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் 8 சீசனில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்த பிக்பாஸ் செளந்தர்யா குக் வித் கோமாளி சீசன் 6ல் பங்கேற்கவுள்ளர்.
கோமாளியாக அவர் கலந்து கொள்ளவுள்ளாராம். அவருடன் இணைந்து புதிதாக 3 கோமாளிகள் இணைந்துள்ளனர். அதில் பிரபல யூடியூபரான சஜின் கோமாளியாக களமிறங்குள்ளார. அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.