அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரம்!! ஒரு நடிகையால் லப்பர் பந்து பட நடிகைக்கு வந்த சிக்கல்..

Tamil Actress Actress Hema Committee Report Lubber Pandhu
By Edward Oct 14, 2024 12:30 PM GMT
Report

ஹேமா கமிட்டி

கேரளாவில் நடைபெற்ற ஹேமா கமிட்டி அறிக்கையில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய விவரம் வெளியாக, சில நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி புகாரளித்து வருகிறார்கள்.

அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரம்!! ஒரு நடிகையால் லப்பர் பந்து பட நடிகைக்கு வந்த சிக்கல்.. | Complaint Against Lubber Pandhu Heroine Swasika

கேரள மாநிலம் ஆலுவாவை சேர்ந்த ஒரு நடிகை, நடிகர்கள் இடைவேளை பாபு, முகேஷ் ஜெயசூர்யா, ஜாஃபர் இடுக்கி உட்பட சிலர் மீது புகாரளித்திருந்தார்.

அதனடிப்படையில், முகேஷ், இடைவேளை பாபு கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆலுவாவை சேர்ந்த அந்த நடிகை, நெடும்பாசேரி போலீஸில் புதிய புகார் ஒன்றினை கொடுத்துள்ளார்.

அதில் நடிகைகள் சுவாசிகா, பீனா ஆண்டனி அவரது கணவரும் நடிகருமான மனோஜ் ஆகியோர் யூடியூப் சேனலில் தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக கூறி வழக்கு பதிவு செய்துள்ளார்.

மலையாள நடிகையான சுவாசிகா, தமிழில் கோரிப்பாளையம், சாட்டை, லப்பர் பந்து போன்ற படங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery