விஜய் மீது புகாரளித்து உத்தம வேசம் போட்ட ராஜேஸ்வரி பிரியா!! கடைசியில் அவருக்கே இந்த நிலைமையா..

Vijay Lokesh Kanagaraj TASMAC Asal Kolaar Leo
By Edward Jun 28, 2023 03:00 PM GMT
Report

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் முதல் சிங்கிள் நான் ரெடி பாடல் வெளியாகி மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது.

இப்பாடலில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளுக்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், சமுக ஆர்வலர், அனைத்து மக்கள் அரசியல் கட்சியி தலைவரான ராஜேஸ்வரி பிரியா விஜய்யை விமர்சித்து பேசியதோடு புகாரும் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அப்பாடலில், புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்ற வசனத்தை பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் புகாரளித்து விஜய்யை விமர்சித்த ராஜேஸ்வரி பிரியா மீது நீலாங்கரை போலிசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

ராஜேஸ்வரி பிரியாவின் முழு நேர வேலையே கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் என்று அப்பகுதியினர் கூறியுள்ளனர். மேலும் கிழக்கு கடற்கரை சலையில் பார் உரிமையாளர் ஜான் என்பவருடன் கூட்டிணைந்து பார் உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூலித்தும் வந்துள்ளார்.

இதுகுறித்து விசாரித்த டாஸ்மாக் அதிகாரிகள், அதை உறுதி செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த விசயம் கேட்ட விஜய் ரசிகர்கள் ராஜேஸ்வரி பிரியாவை கடுமையாக கலாய்த்து கருத்துக்களை பகிர்ந்தும் வருகிறார்கள்.