குக் வித் கோமாளி 5 போட்டியாளர்களின் லிஸ்ட்!! பிக்பாஸ் 7 போட்டியாளரை தட்டித்தூக்கிய தொலைக்காட்சி..
விஜய் டிவியில் சில தினங்களுக்கு முன், கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி நிறைவு பெற்றிருந்த நிலையில், குக் வித் கோமாளி 5வது சீசன் ஆரம்பிக்கவுள்ளனர்.
இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கவுள்ள குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக யார் யார் கலந்து கொள்ளவுள்ளனர் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் கடந்த 4 சீசன்களிலும் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் நடுவர்களாக இருந்து வருகிறார்கள். அதேபோல் கடந்த சீசனில் ரக்சன், விஜே மணிமேகலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர். கோமாளிகள் வழக்கம் போல் இருப்பவர்கள் இருந்து வரும் நிலையில் போட்டியாளர்களின் லிஸ்ட் இணையத்தில் கசிந்துள்ளது.
நடிகை வடிவுக்கரசி, டப்பிங் கலைஞர் தீபா வெங்கட், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, நடிகை மாளவிகா மேனன், பிக்பாஸ் 7 போட்டியாளர் விஷ்ணு, பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவாக நடிக்கும் ஹேமா போன்றவர்களும் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் மகள் அக்ஷதாவும் போட்டியாளர்களாக கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. விரைவில் விஜய் டிவி குழுவினர் உண்மையான போட்டியாளர்கள் யார் யார் என்று அறிவிக்கலாம் என்று பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்..
You May Like This Video
