குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனார் போட்டியாளர்.. கதறி அழுத பிரபலங்கள்
Ammu Abhirami
Star Vijay
Roshini Haripriyan
Cooku with Comali
Venkatesh Bhat
By Kathick
விஜய் தொலைக்காட்சியின் இரண்டு சீசன்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசனாக குக் வித் கோமாளி நடைபெற்று வருகிறது.
இதில், கிராஸ் கருணாஸ், ரோஷினி, அம்மு அபிராமி, சுட்டி அரவிந்த், ஸ்ருத்திகா என பல பிரபலங்கள் போட்டிபோட்டு சமைத்து வருகிறார்கள். மேலும், பாலா, ஷிவாங்கி, குரேஷி, மணிமேகலை மற்றும் பல புதிய கோமாளிகளும் நம்மை மகிழ வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் சுற்று ஒளிபரப்பான இதில், சுமாராக சமைத்த ரோஷினி மற்றும் முத்துக்குமார் இருவரும் பைனல் எலிமினேட் சுற்றில் போட்டியிட்டனர். இதிலும் சுமாராக சமைத்த ரோஷினி நடுவார்களால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
நிகழ்ச்சியில் இருந்து ரோஷினி வெளியேற அங்கிருந்த மணிமேகலை, முத்துக்குமார் குரேஷி, ஸ்ருதிகா, அம்மு அபிராமி என பல பிரபலங்கள் கண்கலங்கினார்.